சிவகாசி தொகுதி பொது மக்களிடம் கையெழுத்து மனு

12

சிவகாசி தொகுதியில் பொது மக்களிடம் கையெழுத்து மனு வாங்கும் நிகழ்வு அக்டோபர் 1, 2021 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக பள்ளப்பட்டி ஊராட்சி முத்தாட்சிமடம் பகுதியில் நடைபெற்றது.

அப்பகுதியில் பெண்களுக்கான கழிப்பறை சுகாதார வளாகம் இல்லாததால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அப்பகுதி மக்களுக்கு கழிப்பிட வசதி கிடைத்திட பொதுமக்களிடம் மனுவில் கையெழுத்து வாங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
+91 91591 39098

 

முந்தைய செய்திகம்பம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் பரப்புரை