மாதவரம் தொகுதி காவிரிச்செல்வன் பா.விக்னேசு மற்றும் ஐயா மறைமலையடிகளாருக்கு வீரவணக்க நிகழ்வு

24

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் ஒன்றியம் சார்பாக காவிரி உரிமை மீட்புகாக தன்னுயிரை ஈகம் செய்த காவிரி மீட்பு போராளி காவிரிச்செல்வன் திரு. விக்னேசு மற்றும் தனித்தமிழ் அறிஞர் ஐயா மறைமலை அடிகளார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு  விளாங்காடு பக்கத்தில் மாலை 6:00 மணியளவில் புழல் ஒன்றிய செயலாளர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை, களப்போராளி திரு.மணலி இடிமுரசு, தொகுதி செயலாளர் திரு.இரா.தமிழ்பிரபு,
தொகுதி பொருளாளர் திரு.கி.கன்னியப்பன் மற்றும் களப்போராளி திரு.மார்ஷல் ராஜ்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

முந்தைய செய்திமாதவரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமாதவரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்