ஈழச்சொந்தங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக 17.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு! – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சீமான்

125

தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈழச்சொந்தங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்திருக்கும் அதே வேளையில், சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழச்சொந்தங்களை முகாம்களுக்கு வெளியே குடியமர்த்தி, அவர்களது நலவாழ்வினையும் உறுதிசெய்து, நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையான ‘முகாம்களே இல்லாத் தமிழ்நாட்டினை’ உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திவீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை