வேம்பார் ஊராட்சியில் ஆவண கோப்புகளை ஆய்வு செய்வதற்காக தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் செயலாளரும் கிழக்கு ஒன்றியத்தின் மூத்த நிர்வாகியுமான *அந்தோணி சந்திரசேகரன்* அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக அனுமதி வாங்கி இருந்தார்.
இந்த தகவலை பொதுத்தகவல் அலுவலர் அவர்கள் வேம்பார் ஊராட்சி தலைவருக்கும் மற்றும் செயலருக்கும் ஒரு நகல் வைத்திருந்தார் காலை
10:30 மணிக்கு ஆவண கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதி கொடுத்து பெறப்பட்ட நகலை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலர் இருவரும் குப்பையில் போட்டுவிட்டனர்.
கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய கிழக்கு ஒன்றிய பொருளாளர் *சொல்லின் செல்வன்* மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை யின் தொகுதி செயலாளர் *அந்தோணி சந்திரசேகரன்* இருவரும் சென்றிருந்த போது ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி விட்டு எம்எல்ஏ விடம் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மக்களின் வரிப்பணம் மக்களுக்காக செலவு செய்யப்படுகிறதா என்பதை அறிவதற்காக ஆவண கோப்புகளை ஆய்வு செய்ய கேட்டிருந்தோம்.
பல குளறுபடிகள் செய்திருப்பதை அறிந்தும் நாங்கள் ஆய்வுசெய்ய வருவதை அறிந்தும், கள ஆய்வு மேற்கொண்டால் பல ஊழல் வெளியில் வரும் என்பதை உணர்ந்து அலுவலகத்தை மூடிவிட்டு *எம்எல்ஏ விடம் சென்று தஞ்சம் புகுந்து தலைவரும் செயலரும் தலைமறைவாகியுள்ளார்.*
இதை மறு ஆய்வு செய்ய அடுத்த தேதியை கேட்டும் தவறு செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க BDO அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம்.
நாம் தமிழர் புலிகள் மறுபடியும் பணியை சிறப்பாக செய்து முடிக்கும்.
நன்றி.
நாம் தமிழர்
இந்த நிகழ்வில் தொகுதி செயலாளர் பொருளாளர் மற்றும் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.