நாகர்கோவில் தொகுதி – குடிநீர் குழாய் சீரமைப்பு பணி

30

உங்கள் பகுதியில் நாம் தமிழர் உறவுகள்” என்ற செயல் திட்டம், பொது மக்களுக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர வடக்கு, 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய் பழுதாகி சரி செய்யப்படாமல் இருப்பதாக  ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகளிடம் 21/7/2021, புதன்கிழமை அன்று புகார் கிடைக்கப் பெற்றது. அந்த புகாரினை துரிதமாக மாநகராட்சி ஆணையரிடம் முறையாக வழங்கி 22/7/2021, வியாழக்கிழமை அன்று தெருக்குழாய் சரி செய்யப்பட்டு மக்கள்  பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது