ஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்

920

செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின் முன்னெடுப்பில்
வெளிநாடுவாழ் இந்தியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை வழங்கவும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனையொட்டி 07-02-2021 அன்று “ஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள் வாக்குரிமையின் அவசியத்தையும் தேவையையும் வலியுறுத்தினர்.

சமூக ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான திரு. ஆரோக்கியராஜ்
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.பாரிவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து விரைவில் மற்ற தேசிய இன மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஆங்கிலவழி கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

  • செந்தமிழர் பாசறை வளைகுடா