தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ‘எம்.பி.சி. – வி’ என்ற புதிய பிரிவை உருவாக்கி, பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீட்டையும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலுள்ள தமிழ்க்குடிகளான சீர்மரபினருக்கு 7 விழுக்காடு உள்ஒதுக்கீட்டையும் வழங்க சட்டவரைவைக் கொண்டு வந்துள்ள தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன்.
காலங்காலமாக கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள பெருத்த சமூக மக்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக்கோரி சமூக நீதிக்களத்தில் நெடுநாட்களாகப் போராடிய ஐயா மருத்துவர் இராமதாசு அவர்களுக்கும், இன்னபிற இயக்கங்களுக்கும், அதனை நடைமுறைப்படுத்த முன்வந்த தமிழக அரசுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ‘எம்.பி.சி. – வி’ என்ற புதிய பிரிவை உருவாக்கி, பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீட்டையும்,
(1/3) pic.twitter.com/5cU5Gmms4v
— சீமான் (@SeemanOfficial) February 26, 2021
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி