விவசாயிகள் போராட்டம் : வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்:! – சீமான் வலியுறுத்தல்

433

நாடு முழுமைக்கும் போராடி வரும் விவசாயப்பெருங்குடிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடிகள், டெல்லியை நோக்கிப் படையெடுத்து வருவதும், தங்களது உரிமைகளுக்காகத் தளராது போராடி வருவதுமான செய்திகள் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன. மண்ணுரிமைக்காகவும், தன்னுரிமைக்காகவும் போராடி வரும் அவ்விவசாயிகள் மீது அரசதிகாரத்தின் மூலம் ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.

வேளாண்மையை உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி நாடெங்கிலும் ஐநூறுக்கும் மேற்பட்ட உழவர் அமைப்புகள் கைகோர்த்துக் களமிறங்கி போராடி வருகின்றன. கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அப்போராட்டத்தில் பங்கேற்று அவர்களோடு இணைந்து வருகின்றனர். இது நாடு முழுமைக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்போராட்டங்களைத் துளியும் பொருட்படுத்தாது பிரதமர் மோடி கள்ள மௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது. விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து அதிகாரத்தைப் பிடித்த பிரதமர் மோடி, அத்தகைய விவசாயிகளின் நியாயமானக் கோரிக்கையைப் பரிசீலிக்காது சனநாயகப்பூர்வமான அவர்களது போராட்டங்களைக்கூட கொடுங்கரங்களின் மூலம் முடக்க முனைவது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இத்தகையக் கொடுங்கோல் போக்கு மன்னிக்கவே முடியாத வரலாற்றுப் பெருந்துரோகமாகும். வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மண்ணுரிமைப் போராளிகள், அரசியல் கட்சிகள் மற்றும் நாடு முழுவதுமுள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் எனப் பல்வேறு துறைகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தவண்ணம் உள்ளது. 130 கோடி மக்களின் உணவுச்சந்தையை மொத்தமாக வணிகமாக்குவதற்கும், கார்ப்பரேட்டுகளின் வசதிக்காக அதனைத் திறந்து வைப்பதற்கும், உலக வர்த்தக அமைப்பின் எதேச்சதிகாரப்போக்கை நிலைநாட்டுவதற்கும் சட்டத்தின் வழியேயே சர்வ வல்லமையோடுகூடிய கொடுங்கோன்மையை ஏவுவது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும். அதற்கெதிராகக் களமிறங்கியுள்ள விவசாயப் பெருங்குடி மக்களின் மகத்தான அறவழிப்போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகும்.

ஆகவே, நாடு முழுமைக்கும் எழுந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயப்பெருங்குடி மக்களின் உணர்வலைகளைப் புரிந்துகொண்டு வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் மக்கள் புரட்சி இந்தியப்பெருநிலம் முழுமைக்கும் வெடிப்பதை எவராலும் தடுத்திட முடியாது என எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

BJP-led Govt Should Respect and Fulfill the Reasonable Demands of Farmers across the Indian Union – Seeman Insists!

Thousands of farmers from Punjab, Haryana, Rajasthan, and Uttar Pradesh, who have been marching towards Delhi demanding either to repeal the Centre’s three recent farm legislations or guarantee Minimum Selling Price for crops by passing a new law. Almost 500 different farmer organizations have joined hands against the anti-farmer legislations passed by the tyrannical BJP-led regime; Further, farmers from Kerala and Uttarakhand have also been marching towards Delhi for the same cause.

In the month of September, three farm bills have been tabled and later legislated against huge opposition in the parliament: the Essential Commodities (Amendment) Act, 2020, the Farmers’ (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act, 2020, and the Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020. All three are interrelated. These acts refer to the core of agriculture on the production of crops, the purchase of produce, and the storage of what is purchased.

These acts allow corporates to put pressure on farmers to produce for export demands of the world market and produce value-added products for the Indian market that will raise question over ability to meet the country’s food needs. Everything from what a farmer has to grow, till the method of cultivation he/she should adopt will now be decided by the corporates. As a result, farmers, who had no right to set prices, could no longer decide anything. In this way, the farmers will be deprived of even the minimum subsistence they have.

The people of Indian Union on the whole have been affected by COVID-19. Yes, Indirectly! The BJP-led Centre has utilized the COVID-19 crisis to pass on laws that are anti-people and that will divide its own people in the name of religion, social status and what not. The Centre has not even spared the environment, without which the life does not go on. The recent draft Environment Impact Assessment Bill, Projects like laying Optical Cable Fiber in Western Ghats and more are a few examples. The BJP-led Centre has targeted each and every sector: The disastrous “National Education Policy (NEP)” for the Education sector; Destroyer of rural medico dreams “NEET” for the Health sector; etc.

The latest addition to the anti-people measure is the introduction of three farm legislations that are against the Agricultural sector. Since its introduction, there have been massive, widespread opposition from various spheres including farmers, activists, political parties, and various farmers’ organization across the Union. History will never forgive the disgraceful act of the ruling BJP government in the midst of legitimizing the tyranny of the World Trade Organization (WTO) to market the food market of 130 Crore people and open it up to the convenience of corporates.

As warned on behalf of the Naam Tamilar Katchi in its statement dated 23/09/2020, a people’s revolution against state terrorism has erupted as the ruling BJP government seeks to implement these bills in spite of the nationwide protests and the sentiments of the agrarian masses. This people’s revolution has gained momentum and had reached to level that the cornered Centre has no option and was forced to hold talks with the farmers.

On behalf of the Naam Tamilar Katchi, I request the BJP Government to heed to the farmers demands and act accordingly rather trying to indulge in dissembling this people’s revolution. In case, if that does not happen, this people’s revolution will turn into an even more massive one in a way the whole world has never witnessed.