ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பனைத்திருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு | அம்பத்தூர் |

85

நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்ட பனைத்திருவிழா2020-ஐ தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வு நேற்று 04-10-2020 காலை அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட சதாக்குளம் பகுதியில் நடைபெற்றது.

பனைத்திருவிழாவைச் சிறப்பாக முன்னெடுத்துவரும் நாம் தமிழர்- சுற்றுச்சூழல் பாசறையினருக்கும், தமிழகமெங்கும் ஒரே நாளில் 10 இலட்சம் பனைவிதைகள் நடவு செய்துவரும் நாம் தமிழர் உறவுகளுக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நிகழ்வைத் தொடர்ந்து தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவுக்கல்வெட்டு சீமான் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

#NTKPalmFest2020 #Seeman