மொடக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

13

தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி தொகுதியில் 03/10/2020 (சனிக்கிழமை) அன்று இரண்டு இடங்களில் (மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி) உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டன.

உறுப்பினர் சேர்க்கை முகாம் உடன் சேர்த்து கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் கட்சியின் செயற்பாட்டு வரைவுகளை விளக்கி துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.