தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்

40

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் 31.1.2020 அன்று நாம்தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிற்சங்க நிர்வாகிகளை மதுரை-கோவில்பட்டி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பணியிடமாற்றம் செய்தது 
இவ்விரோதப் போக்கினை கடைபிடிக்கும் கடலூர் செம்மங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ்  நிர்வாகத்திடம் பணியிடமாற்றம் செய்த தொழிற்சங்க நிர்வாகிகளை கடலூர் செம்மாங்குப்பம் தொழிற்சாலையில் மறுபடியும் பணியமர்த்த வேண்டும் எனவும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கவும் முறையிடப்பட்டது அதன் ஊடாக நாம் தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் கடலூர் நாம் தமிழர்கட்சி  தலைமைஅலுவலகத்தில் நடைபெற்றது.