திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தொடர் போராட்டத்தால் கிடைத்த வெற்றி.
திருச்சி மாவட்டம் – திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரட்டை வாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில் புதிய மதுபானக்கடை திறக்க இருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மதுபானக்கடை திறக்க கூடாது என்று (29.09.2019) கண்டனச் சுவரொட்டிகள் அந்த பகுதி முழுவதுமாக ஒட்டப்பட்டது, (30.09.2019) மதுபானக் கடைத் திறக்க அனுமதி மறுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
(01.10.2019) பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்பட்டது. இதனோடு தொடர்ந்து மூன்று நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் அடுத்தடுத்து தொடர் நடவடிக்கை காரணமாக மதுக்கடை திறக்க மாட்டோம் என்று அரசு எழுத்து பூர்வமான உத்தரவை பிறப்பித்தது.
இதில் பொதுமக்கள் பெருமளவு கலந்துகொண்டு ஆதரவாக துணைநின்றார்கள்.
ஒருங்கிணைப்பு :
கவுஸ் மொய்தீன்- தொகுதி துணைத்தலைவர்
இராஜாஅழகப்பன்- தொகுதி துணைச்செயலாளர்.
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி.