கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

410

02.10.19 நடைபெற்ற பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சிக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் மற்றும் கட்சியினர் பங்கேற்று ஊராட்சி அடிப்படை வசதிகள்,  வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகைகளைக்காண பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற பொதுமக்களின் நலன்களை வலியுறுத்தி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம், வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்பாடு, டெங்கு காய்ச்சல் தடுப்பு வழிகள், பொதுமக்களுக்கு  ரேசன் பொருட்கள் வினியோக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி  ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு எதிர்ப்பு தீர்மானங்கள் முதலான மண்சார்ந்த மக்களின் வளர்ச்சி குறித்து முக்கிய விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

முந்தைய செய்திஐயா பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-பல்லடம்
அடுத்த செய்திபெருந்தலைவர்  ஐயா #காமராசர் மலர்வணக்க நிகழ்வு -செய்யூர் தொகுதி