கலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு தொகுதி

44
2019-6-23 அன்று  கலந்தாய்வு கூட்டம்  கிணத்துக்கடவு தொகுதி சார்பாக
கலந்தாய்வு மற்றும் கருத்தரங்கம் கொடியேற்று நிகழ்வோடு தொடங்கி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர் , கல்யாணசுந்தரம் மற்றும் சட்டத்தரணி ராஜிவ் காந்தி அவர்கள் கிணத்துக்கடவு தொகுதியின் செயல்பாடுகள் குறித்தும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினர். கோவை மகளீர் பாசறை சகோதரி கார்த்திகா பெண்கள் அரசியலில் பங்குபெறுவதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாசறை மாநில செய்திதொடர்பாளர் சகோதரி சுனந்தா சுற்றுசுழல் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மண்டல செயலாளர் வாகப் ஐயா தொகுதி செயல்பாடுகளுக்கு வாழ்த்துரை வழங்கினார். தொகுதியின் ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 100வது வார்டு, வெள்ளலூர், நாச்சிபாளையம் இப்பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். புதிய பொறுப்பாளருக்கு ஆட்சி வரைவு புத்தகம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் வெற்றிச்செல்வன் மரக்கன்றுகள் வழங்கினார்.

 

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி