கிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி

46

திண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது  இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது                                                                                இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு முறையாக கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டித்து முறையிட்டனர்                                                                                  முறையற்ற விதத்தில் கிராம சபை கூட்டம் ஏற்பாடு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து மக்களின் கோரிக்கையை தீர்மானமாக எழுதப்பட்டது. அவற்றில்,

1. புதிதாக சாவடிக்கு மேற்கு பகுதியில் பெண்கள் கழிவறை கட்டவும், இருக்கும் கழிவறைகளை முறையாக பராமரிக்கவும்,

2. செக்போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை அகற்றவும் தீர்மானம் போடப்பட்டது,

3. குடிநீர் குழாய் சிக்கலை சரிசெய்ய மறு சீராய்வு செய்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்லும்படி வழி செய்யவும்,

4. ஊராட்சி நூலகம் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல்

5. விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

6. ஊராட்சிக்கு சொந்தமான அசையும் அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்களை மக்கள் பார்வைக்கு கொண்டு வரவும்,

7. ஊராட்சிக்கு சொந்தமான கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மீது கவனம் செலுத்தி தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும்,

8. கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருந்த துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவும்,

9. நெகிழி ஒழிப்பு, மரம் நடுதல் அவசியத்தை பொது மக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்

10. கழிவு மேலாண்மை முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வரவு செலவு கணக்கு வரும் திங்கள் (ஜூலை 01) அன்று சமர்ப்பிக்க ஊராட்சி செயலாளர் உறுதியளித்துள்ளார்.