நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம்

37
பசுமை போராளி நம்மாழ்வார்  அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
==================
30.12.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக பசுமை போராளி,தமிழினத்தின் பெரியார் நம்மாழ்வார்  அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையிலும், உடுமலை மடத்துக்குளம்  அலுவலகம் இரண்டாம் ஆண்டை சிறப்பிக்கும் வகையிலும், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகம்
சார்பில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது!!
பெருந்தகப்பன் நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் சுடரேற்றி  புகழ்வணக்க முழக்கங்களோடு மலர்த்தூவி மரியாதை செய்து துவங்கி வைத்தனர் !! தொடர்ந்து நம்மாழ்வார் குடில் முக்கிய நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி உறவுகள் உட்பட 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலரும் மலர் வணக்கம் செலுத்தினார்கள் !!
பின்னர் கொடியேற்றப்பட்டு கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது!!
முந்தைய செய்திநம்மாழ்வார் புகழ் வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி
அடுத்த செய்திஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை