பனை விதை நடும் விழா- அண்ணாநகர் தொகுதி.

49

‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா’ 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – அண்ணாநகர் தொகுதி.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்! உயிர் காப்போம்!’ என்கிற உயரிய முழக்கத்தை முன்னிறுத்தி மரக்கன்றுகள் நடுதல், உழவாரப்பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் இயற்கை குறித்தானப் பரப்புரைகளை மேற்கொள்ளுதல் எனத் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து பல்லுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தும் அரிய பெரும்பணியினைச் செய்து வருகிறது.

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறைப் பணிகளுக்கு முத்தாய்ப்பு சேர்க்கும் விதமாக கடந்த செப்டம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனைவிதைகளை நடுதல்’ என்கிற பெருந்திட்டம் தமிழகம் முழுக்க ஒரே நாளன்று முன்னெடுக்கப்பட்டது.

அதனையொட்டி, அண்ணா நகர் தொகுதி முழுக்க இருக்கிற சுற்றுச்சூழல் மேம்பட வேண்டிய இடத்தில் முதல் கட்டமாக ‘ இருநூறு பனை விதை விதைத்தல் நிகழ்வு’ நடந்தது.

முந்தைய செய்திசுற்றறிக்கை: ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா’
அடுத்த செய்திமண் மீட்புப் போராளிகளுக்குப் புகழ் வணக்க விழாப் பொதுக்கூட்டம் – சங்கரன்கோவில்