மண் மீட்புப் போராளிகளுக்குப் புகழ் வணக்க விழாப் பொதுக்கூட்டம் – சங்கரன்கோவில் | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது! என்ற தத்துவ முழக்கத்தை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மண்மீட்புப் போராளிகள் வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், அழகுமுத்துகோன், மருதிருவர், முத்தரையர், சுந்தரலிங்கனார், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன், வீரப்பெரும்பாட்டிகள் வேலுநாச்சியார், குயிலி ஆகியோரின் பெரும்புகழ்ப் போற்றும் புகழ்வணக்கப் பெருவிழாப் பொதுக்கூட்டம் நேற்று 22-09-2018 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வடக்கு இரத வீதி மணிக்கிரீவன் திடலில் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றுகிறாறினார்.
நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.