முசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்

58
naam-tamilar-katchi-musiri-thaa-pettai

முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம், கருப்பம்பட்டி, கோணங்கிபட்டி, மற்றும் ஊருடையாப்பட்டி, ஆகிய பகுதிகளில் 17-03-2018 அன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் தெருமுனைக்கூட்டமும் நடைபெற்றது.

மண்டலச் செயலாளர் ஐயா திரு.சேது மனோகரன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசைத்தம்பி முன்னிலையில் திருச்சி இளைஞர் பாசறை செயலாளர் திரு. சரவணன், தா. பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு. நாகராசு, முசிறி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு. அஸ்வின், தா. பேட்டை நகர செயலாளர் திரு. சதீஷ்கண்ணன் மற்றும் மேட்டுப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் திரு. சரவணன் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.