பனை விதைகளை விதைக்கும் நாம் தமிழர் உறவுகள் – திருக்கோவிலூர்

265

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் சடைக்கட்டி கிராமத்தில் 17-09-2017 அன்று பனை விதைகள் விதைக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதிப் பொறுப்பாளர் சிவக்குமார் பணியை முன்னெடுத்து சென்றார்.

நாம் தமிழர் ஆட்சியில் பனை தமிழகத்தின் தேசிய மரமாக அறிவிக்கப்படும். ஒரு பனைமரம் ஒரு வருடத்திற்கு 180 லிட்டர் பதநீர் கொடுக்கிறது. 25 கிலோ பனைவெல்லம் கொடுக்கிறது. 16 கிலோ தும்பு, 25 கிலோ ஈக்கு, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் ஆகியவற்றை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் பலகோடி பனைத் திட்டம், தமிழரின் தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

அதனால் இருக்கும் பனைமரங்களைப் பாதுகாப்பது, புதிய பனைமரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஊர் தோறும் இருக்கும் நீர் நிலைகளைச் சுற்றிப் பனை மரங்களை ஏராளமாக நட்டு வளர்க்க வேண்டிய நடவடிக்கைகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாம் தமிழர் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது

முந்தைய செய்தி“நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” – மாபெரும் கருத்தரங்கம்
அடுத்த செய்திபா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு மாவட்டம்