கவியரசு கண்ணதாசன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை, தி-நகரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (17-10-16) காலை 11 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக கவியரசு கண்ணதாசன் குறித்து இன்றைய ‘தினம் ஒரு செய்தியில்’ தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியிருப்பதாவது,
இசைப்பாடலிலே என் உயிர் துடிப்பு!
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
காவியத்தாயின் இளையமகன்!
காதல் பெண்களின் பெருந்தலைவன்!
மானிடச் சாதியில் தனி மனிதன்!
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!
கவிஞன் இவன் ஒரு காலக் கணிதம்!
இறந்தும் இறவா இலக்கியம்!
இசையோடு தமிழமுது கலந்து தத்துவப்பால் ஊட்டிய தாய்!
ஈடுஇணையற்ற இசைப்பாக்களின் அரசு!
நம் கவியரசு கண்ணதாசன் அவர்களினுடைய நினைவுநாள் இன்ற.
அந்தப் பெருங்கவிக்குப் பெருமையோடு
நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.