எழுவர் விடுதலை கோரி நடைபெறும் வாகனப்பேரணிக்கு செந்தமிழன் சீமான் அழைப்பு

20

எழுவர் விடுதலை கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெறும் வாகனப்பேரணிக்கு செந்தமிழன் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புக்குரிய உறவுகளுக்கு!
வணக்கம். வரும் சூன் 11 அன்றோடு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளாகிறது. அந்த நாளில் சிறைக்கொட்டடியிலே கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் ஏதுமறியா அப்பாவிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய நம் உறவுகளின் விடுதலை கோரி நம் வீரத்தாய் அற்புதம் அம்மா அவர்கள் தலைமையில் வேலூரிலிருந்து சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வரை நோக்கி வாகனப்பேரணி எழுச்சியோடு நடைபெறவிருக்கிறது. அதில் நாம் தமிழர் உறவுகள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களும் திரளாக பங்கேற்று, ‘எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை’ என உலகிற்கு பறைசாற்ற அன்போடு அழைக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.