நான்காவது நாளாக தேனாம்பேட்டையில் துப்புரவுப்பணி 

27

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை  துப்புரவு செய்யும் பணி 18-12-15 அன்று தொடங்கி  தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று  வருகிறது.  அதன்படி, முதல் இரண்டு நாட்கள் இராயபுரம் காசிமேட்டிலும், மூன்றாவது நாள் தாம்பரம் பீர்க்கங்கரணையிலும் நடைபெற்றது.

நான்காவது  நாளான இன்று (22-12-15)   துப்புரவுப்பணி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தேனாம்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் தேனாம்பேட்டை குடியிருப்புப் பகுதியில் மழைவெள்ளத்தால் தேங்கியிருந்த சாக்கடைகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தினர்.
IMG_6444 IMG_6474 IMG_6484 IMG_6494 IMG_6433