வனவிலங்கு சரணாலயம் அமைப்பதைக்கண்டித்து கொடைக்கானலில் பொதுக்கூட்டம் நடந்தது

59

கொடைக்கானலில் வன விலங்கு சரணாலயம் அமைப்பதை எதிர்த்தும்,ஆந்திர வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்தும் (07-04-2015) அன்று கொடைக்கானல் பூம்பாறை கிராமத்திலும், (08-04-2015) அன்று மூஞ்சிக்கல் பகுதியிலும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமை வகித்தார். இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் வழக்கறிஞர் மணிசெந்தில், பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீமான் வினோத், மணி, அபுதாகிர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முந்தைய செய்திநாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.
அடுத்த செய்திநாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் இன எழுச்சி கருத்தரங்கம் – 04-04-2015 அண்ணன் சீமான் எழிச்சி உரை