தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியினர் குருதிக்கொடை!

37

24-11-2013 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் ஆர்.கெ.ஜி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் 59 ஆம் ஆண்டு பிறந்த காளினை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் 59 பேர் செஞ்சிலுவை சங்கத்திடம் குருதிக்கொடை செய்தனர்.

மாலையில் நடந்த மாவீரர் நிகழ்வில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் வழக்கறிஞர் மணி செந்தில், பொறியாளர் துருவன், மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் உரையாற்றினர்.

கும்பகோணம் நகரச்செயலாளர் மீ.ரகமத்துல்லா வரவேற்புரை ஆற்றினார். நாம் தமிழர் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் வினோபா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆதி.குமரவேல்,வழக்கறிஞர் பாசறை மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் தினேசுகுமார்,இளைஞர்பாசறை மாவட்ட இணைச்செயலாளர் ஒவியர் கார்த்திக்கேயன், மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்ட பொறுப்பாளர்கள் கண்ணன், பிரதீப்,நாதன், தி.மருதூர் ஒன்றியச்செயலாளர் மோகன், திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் பிரகாசு , குடந்தை நகர இணைச்செயலாளர் வடிவேல், நகர இளைஞர் பாசறை செயலாளர் மாதுளம் பேட்டை கார்த்திக் ,மாணவப்பாசறை பொறுப்பாளர்கள் மணி,கெளதம், மற்றும் கட்சியின் மாவட்ட,நகர,ஒன்றிய ,அனைத்துப் பாசறை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டனர்.மொழிக்காக ,இனத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு இந்நிகழ்வில் மலர் தூவி வீரவணக்கம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திஎங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்
அடுத்த செய்திசிவகிரியில் கொட்டும் மழையில் நடந்த பட்டினிபோராட்டம்.