”காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது”கும்பகோணம் மேலக்காவிரியில் பிரச்சாரக் கூட்டம்

24

காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் மேலக்காவிரியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத்துணைச்செயலாளர் கோ.வடிவேல் தலைமை தாங்கினார். நகரத்துணைத்தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். மாவட்ட கலை பண்பாட்டு செயலாளர் பிரதீப்  நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் வினோபா ,மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில் ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் ,மாவட்டப் பொருளாளர் கண்ணன், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் தினேசு , ஒன்றியச்செயலாளர் ஜெஸ்டீன், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் ஒவியர் கார்த்திக்கேயன் உள்ளீட்ட பலர்  கலந்துக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டறிக்கைகளும் வழங்கபட்டன.

 

முந்தைய செய்திமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு- செந்தமிழன் சீமான் அழைப்பு
அடுத்த செய்திமாலை முரசு அதிபர் இராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் அஞ்சலி