சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம்!

27

விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம் .எதிர்வரும் 30.09.2013 அன்று நாம் அனைவரும் ஓங்கி குரல்கொடுப்போம் அதனை தொடர்ந்தும் ஓயாமல் உழைப்போம். இறுதி மூச்சு எமது உடலில் இருக்கும் வரை உறுதி தளராமல் தமிழீழம் என்றே உச்சரிக்கட்டும் .

எமது உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம்.

புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் வலிகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம் .எமது தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது.
ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம் .

அவ் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை இனவாத அரசுக்கு பல்வேறு பக்கங்கள் ஊடாகவும் பாரிய அழுத்தங்கள் எழும்புகின்றன . இலங்கையின் வெளியுறவு தொடர்பு சொந்த நலன்களின் அடிப்படையில் தொடர்ந்தாலும் பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தமது அதிருப்திகளை மெல்ல வெளியிட ஆரம்பிக்கின்றன .
எது எவ்வாறு இருப்பினும் எமது விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது .ஆதலால் நாம் எம்மை பலப்படுத்தும் வகையில் எமது தார்மீக அரசியல் போராட்டத்தை வலுப்படுத்துவோம் .

கடந்த 16.09.2013 அன்று ஐநா திடலில் இருந்து நுரு டீசரளளநடள நகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான ஈருறுளிப்பயணம் இன்று காலை டீநசn நகரில் இருந்து 123 முஆ தூரத்தை கடந்து மாலை 7 மணிக்கு டீயளநட நகரை வந்தடைந்ததை தொடர்ந்து பிரான்ஸ் எல்லப்பகுதியான ளுயiவெ டுழரளைந நகரத்தில் தமிழ் மக்களால் மனிதநேய செயற்பாட்டாளர்கள் வரவேற்கப்பட்டனர்.

இன்றைய பயணத்தில் பிரித்தானியாவில் இருந்து மனிதநேய செயற்பாட்டாளர் கோபி சிவந்தன் அவர்களும் ளுழடழவாரn நகரில் இணைந்து கொண்டார். இன்றைய பயண வழி மிகுந்த மலைப் பிரதேசமாக இருந்ததோடு தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். நடைபயணத்தின் இறுதி நாளான 30.09.2013 ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் மாபெரும் எழுச்சி நிகழ்வு இடம்பெறும் .

எமது உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம் .எதிர்வரும் 30.09.2013 அன்று நாம் அனைவரும் ஓங்கி குரல்கொடுப்போம் அதனை தொடர்ந்தும் ஓயாமல் உழைப்போம். இறுதி மூச்சு எமது உடலில் இருக்கும் வரை உறுதி தளராமல் தமிழீழம் என்றே உச்சரிக்கட்டும் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

முந்தைய செய்திஎட்டுத் திக்கும் எமக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் – இன அழிப்புக்கான நீதி கேட்கும் ஈருறுளிப் பயணம்
அடுத்த செய்திஎதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்!