தமிழீழ விடுதலையின் தானைத்தளபதிகளின் நினைவு சுமந்த எழுச்சிமாலை பிரான்சில் நினைவு கூரப்பட்டது!

42

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் லெப். கேணல் குமரப்பா லெப். புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், லெப். மாலதி யின் 26 ம் ஆண்டின் நீங்காத நினைவிலும், கேணல் சங்கர் கேணல் ராயு லெப். கேணல் நாதன், கப்டன் கஐன், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக பிரான்சில் பாரிசின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சென்டனி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

போர்சு திறவாய் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல். 3.00 மணிக்கு ஈகைச்சுடர் எற்றல் அகவணக்கத்துடன் நினைவு கூரப்பட்டது. ஈகைச்சுடரினை கப்டன் அருளிசையாவின் சகோதரனும், கேணல் பரிதி அவர்களின் பெற்றோர், துணைவியார் ஏற்றி வைத்தனர். மலர்வணக்கத்துடன் தமிழ்சங்கங்களின் பொறுப்பாளர் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக திரு அகிலன் அவர்களும் உரையாற்றியிருந்தனர்.

காலத்தின் தேவையறிந்த செயற்பாடுகள் சர்வதேசரீதியாக முன்னெடுக்கப்படுவதும், அதற்கான கடமைகளை எம் மக்கள் ஆற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பொபினி, இவிறி,சோதியா கலைக்கல்லூரி, மாவீரர் நினைவு நடனங்களையும், கலைநிகழ்வுகளையும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் காலத்தையொட்டிய நாடகத்தை தந்திருந்தனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் உறுதியுரையுடன் எழுச்சி மாலை நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

முந்தைய செய்திபிரித்தானியாவில் தியாகி திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு சுமந்த வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆபிரிக்க நாடுகளை நோக்கிய கவனயிர்ப்பு போராட்டம் பிரான்சில்!