சேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.

54

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.

நாள்:23.02.2013

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குளத்தூர் ஒன்றியம் மாங்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் பிற்பகல் 12.00 மணி அளவில் தொடங்கியது.

இக்கூட்டம் துவங்குவதற்கு முன்பாக நமது தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயும், நமது தேசத்தாயுமான வேலுப்பிள்ளை பார்வதியம்மாள்  அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

இதனை தொடர்ந்து, சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமையில் குளத்தூர் ஒன்றிய வழக்கறிஞர் சி.ராசா மற்றும் மாங்காடு பகுதி திரு. சான் (ஜான்), குளத்தூர் பகுதி முருகன், பாலவாடி சக்திவேல், கிழக்கு கோட்டையூர் புகழ்மாறன் (எ) சேட்டு, பிரகாசு, மேட்டூர் மணிவேல், துரைசாமி,புதுச்சாம்பள்ளி செயபிரகாசு, ஓமலூர் ரமேசு, எடப்பாடி ரமேசு, மற்றும் மாங்காடு பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளும் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் காவிரி நதி நீர், விவசாய நிலங்கள் பாதிப்பு,இளைஞர்களின் சீர்கேட்டிற்குக் காரணமாக இருக்கும் மதுவிலக்கு குறித்தும், பெற்றோரை பேணிக்காப்பது குறித்தும், முதியோர் இல்லம் உருவாததைத் தடுப்பது குறித்தும் ஏன் நாம் தமிழர் கட்சி என்பதை மேற்கோள்காட்டியும், நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் குறித்தும் நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. அருண் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு அடைய செய்தார்கள்.

இது போல் தமிழகத்தில் மூளை முடுக்குகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று தமிழர்களின் உரிமை குறித்தும் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவை குறித்தும் பிரச்சாரம் செய்வதே நாம் தமிழர்கள் கட்சியின் மேன்மையான நோக்கமாகும் என்பதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்கள் தெரிவித்தார்.

“இலக்கு ஒன்று தான் அது எம் இனத்தின் விடுதலை” – நாம் தமிழர்.

மேலும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி இளைஞர்கள் சிந்திக்கும் வண்ணம் ஒரு சில கருத்துக்களை அவர்கள் விளக்கி கூறினார்கள்:

“அவன் இல்லமோ அன்னை இல்லம்

அவன் அன்னை இருப்பதோ அனாதை இல்லம்” – ஏன் இந்த கேடு?

எங்கே நம் தமிழரின் பண்பாடு?

பெற்றோரை போற்று நற்பெயரை நிலை நாட்டு.

பெற்றோர் ஆசிரியரை நீ மதிப்பாய்

“தமிழர்“

பெருமையை நிலை நாட்ட நீ துடிப்பாய்

– நாம் தமிழர்.

“படிப்பில் கவனம் செலுத்திடு

பருவக்கோலாறைத் தடுத்திடு”

உலக அளவில் உயரும் படி (ப்பு)

படிப்பே உன்னை உயர்த்தும் நீ படி.!

படிப்பே பெண்டிற்கு உயிர்வேலி

படிக்கும் முன்னே ஏன் தாலி

– நாம் தமிழர்.

மேலும் இளம் வயது திருமணத்தை தடுப்பது குறித்தும் அப்பகுதி மக்களுக்கு எடுத்து கூறபட்டது.

இந்நிகழ்வை குளத்தூர் வழக்கறிஞர் ராசா மற்றும் மாங்காடு நாம் தமிழர் கட்சி உறவுகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேட்டூர் வட்டம்,  குளத்தூர் ஒன்றிய பகுதில் உள்ளோர் நாம் தமிழராய் இணைய தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: ராசா – 99525 24233

முந்தைய செய்திதிருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் கொள்கை விளக்க கூட்டம்.
அடுத்த செய்திபாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இரயில் மறியல்