வீரத்தாயின் நினைவு நாள்!

33

வீரத்தாயின் நினைவு நாள்

தமிழர்கள் இருக்கிறார்கள்
இத்தரணியில் என்று
உலகமெங்கும் உச்சரிக்க வைத்த
எம்தலைவனை பெற்றெடுத்தவள்
எம் வீரத்தாய் அம்மா பார்வதி

முற்காலத்தில் வீரத்தாய்கள்
வாழ்ந்தார்கள் என்று பாடநூல்களில்
படித்ததுண்டு – ஆனால்
இன்றும் எம் இனத்தில் வீரத்தாய்கள்
வாழ்கிறார்கள் என்று எம்கண்களுக்கு
நிஜமாக்கியது எம் வீரத்தாய் அம்மா பார்வதி

தமிழர்களின் உயிர் தமிழீழம்
அது இல்லையே தமிழர்கள்
இல்லை
அதை நன்கறிந்து தான் ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த தன் வீரபுதல்வனை
தமிழர்களின் உயிரை காக்க அனுப்பியவள்
எம் வீரத்தாய் அம்மா பார்வதி

எங்களால் கண்ணீர் விட்டு அழமுடியவில்லை
அம்மா உந்தன் பிரிவை எண்ணி
உந்தன் மறைவை தமிழீழத்தில்
மட்டுமல்ல இவ்வுலகமெங்கும்
தீராத துன்பத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது

எம்மாவீரர்கள் எவ்வாறு எம் கண்களுக்கு
மறையாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ
அதே போல் நீங்களும் எம் கண்களுக்கு
மறையாமல் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்

உந்தன் ஆத்மாவை வேண்டுகிறேன்
உந்தனை போன்ற வீரத்தாயை எம் இனம்
பெற மீண்டும் தமிழீழத்தில் கருவுற
– ஏனெனில்
நாம் புத்தகத்திலும் படித்தோம் நிஜத்திலும்
கண்டோம்
வருங்காலம் புத்தகத்தில் படிப்பதற்கு தங்கள்
வரலாறு இருக்கும் ஆனால் நிஜத்தில்?
அதற்காக வேண்டுகிறேன் தங்கள் ஆத்மாவை
மீண்டும் கருவுற தமிழீழத்தில்
எம் வீரத்தாய் அம்மா பார்வதியே.