சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலு‏

16

சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலும் லண்டனில் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இலங்கையின் சுதந்திர நாளான இன்று(04) அதனை அந் நாடு வெகு விமர்சையாகக் கொண்டாடும் நிலையில், தமிழர்களுக்கு அது கரி நாள் என அறிவிக்கப்பட்டது. இலங்கை சுதந்திர தினத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனைக் காட்டவும் தமிழர்கள் அதனை ஒரு துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர் என்பதனை உலகிற்குப் பறைசாற்றவும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. பிரித்தானியப் பிரதமர் வாசல்ஸ்தலத்துக்கு முன்னதாக இப் போராட்டம் நடைபெற்றது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டம் கடும் குளிர் மட்டும் பனிப்பொழிவுக்கும் மத்தியில் பல தமிழர்கள் இதில் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.