தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012!

40
“தேமதுர தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே தமிழ் இளையோர் அமைப்பாகிய எம்மால் நடாத்தப்பட்ட ‘கற்க கசடற 2012’-ன் திருக்குறள் போட்டியின்  நோக்கமாகும்.

அந்த நோக்கை அடிப்படையாக கொண்டே எம் நிகழ்வு பேச்சு, பாடல், நடனம், பரதநாட்டியம் போன்றவையும் அத்துடன், எங்கள் போட்டியாளர்களை பாராட்டி பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

எமது போட்டியில் பிரதம விருந்திராக கலந்து சிறப்பித்தவர். புலவர் திரு.சிவநாதன்அய்யா அவர்கள்.அவருடன்திருமதி. சிவநாதன்அவர்களும் ஏனையவிருந்தினர்களும்எமதுஅழைப்பைஏற்று நிகழ்வில்கலந்துசிறப்பித்திருந்தார். புலவர் திரு.சிவநாதன்அவர்கள் தான்வழங்கியசிற்றுரையில் எம் நிகழ்வைசிறப்பாக பாராட்டி பேசியதுடன், இனி வர இருக்கும்வேலைத்திட்டங்களுக்கும் வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

எங்களுடைய இந்த போட்டியில் பங்குபற்றியவர்களினதும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினரது பங்களிப்பும் மிகவும் ஆதரவாக அமைந்தது. நேற்றைய நிகழ்வில் அந்தநிகழ்விடம் நிரம்பும் படியாக அமைந்திருந்தது அவர்களின் ஆதரவும், வரவேற்பும். அத்துடன்,பரிசுபெற்றவர்களில்சிலர் தங்களதுபரிசைஇளையோர்அமைப்பிற்குநன்கொடையாகவழங்கியதுநன்றிக்குரியது.அத்துடன்அங்குவந்திருந்தபெரியோர்களும்தம்மால்முடிந்தஉதவிகளைவழங்கிஊக்கப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறுநடைபெற்றநிகழ்வில்கலைநிகழ்ச்சிகளும்இடம்பெற்றிருந்தன.அவைகள்கலைக்கூடங்கள், தமிழ்பாடசாலைகள்சார்பாகவும்,தமிழ்இளையோர்அமைப்பினராலும்வழங்கப்பட்டிருந்தன.இதில்தமிழ்இளையோர்அமைப்பினரால்,எம்மால்முன்னெடுக்கப்பட்டவேறுசிலவேலைத்திட்டங்களின்விவரப்படைப்புஒன்றுஉள்ளடக்கப்படிருந்தது,அதுஅங்குவந்திருந்தவரகளுக்குஎமதுவேலைத்திட்டங்களின்மேற்பார்வையைகொடுக்ககூடியாதாகஅமைந்திருந்தது.

இவ்வாறாக நடைபெற்ற விழாவில் கலந்து சிறப்பித்திருந்த, பிரதம விருந்தினருக்கும், ஏனைய விருந்தினர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் அதோடு எமது ஆதரவாளர்களுக்கும் பாராட்டுக்களையும், மகிழ்ச்சியோடு நன்றியையும் தெரிவிக்கும் முகமாக நன்றியுரையோடு எமது ‘கற்க கசடற-2012 ‘-ன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவடைந்தது.

Media Team
Tamil Youth Organisation – United Kingdom

 

முந்தைய செய்திதமிழீழ வைப்பகத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய அமெரிக்கத் தூதுவர்!!
அடுத்த செய்திஎன்றும் வாழும் வான்புலிகள்!