வல்வெட்டித்துறையில் நாடகம்போடப்போகும் இனப்படுகொலைவாதி மகிந்த கும்பல்!?

32

வல்வெட்டித்துறையில் நாடகம்போடப்போகும் இனப்படுகொலைவாதி மகிந்த கும்பல்!?

எமது மக்களை கதற கதற உயிருடன் கூட்டம்கூட்டமாக புதைத்து அதன்மேலே சிங்ககொடியை நாட்டிய சிங்களஅமைச்சர்கள்,அவர்களின் கால்களின்கீழே சேவகம் செய்யும்டக்கிளஸ் தேவானந்தா,மிகப்பெரும் தமிழின படுகொலையை நடாத்திய மகிந்தவின் மகன் ஆகியோர் நாளை (19.01.2012.வியாழக்கிழமை) வல்வெட்டித்துறைக்கு வருகிறார்கள்!?.

தமிழ்இனம் காலகாலமாக விவசாயம்செய்த நிலங்களை அபகரித்தும்,தமிழ்மக்கள் கடலில் மீன் பிடிப்பதற்கும் ஆயிரம் இடைஞ்சல்களை ஏற்படுத்திக்கொண்டும் முழுதமிழினத்தினதும் உணவு உற்பத்தியை பலாத்காரமாக நிறுத்திவைத்தக்கொண்டும் இருக்கும் சிங்களஅரசு இப்போது புதிய வேடத்துடன் வல்வெட்டித்துறைக்கு வருகிறது.

பாடசாலைப்பிள்ளைகளுக்கு போசாக்கு திட்டாமாம்,சத்துணவு திட்டமாம்.

சிறீலங்காவின் மீது தொடரும் சர்வதேச நெருக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும், வருகின்ற மார்ச்மாதம் ஜெனீவாவில் நடைபெறஉள்ள மனிதஉரிமைகூட்டத்தொடரில் இனப்படுகொலை,போர்க்குற்றம் என்பனவற்றின்மீதான விசாரணைக் கோரிக்கைக்கு சர்வதேச நாடுகளின் ஒட்டுமொத்தஆதரவு கிடைத்துவிடுவதை தடுப்பதற்காகவும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்களதேசத்துக்கு எதிராகவும் தோன்றிவரும் எழுச்சியை மழுங்கடிப்பதற்காகவும் இத்தகைய போசாக்கு,சத்துணவு நாடகங்களை மகிந்த கும்பல் அரங்கேற்ற வருகின்றது.

எல்லாவகையான வளங்களையும்,உற்பத்திகளையும் தடுத்து வைத்துக்கொண்டு சுரண்டிக்கொண்டு எமது மக்களுக்கு இலவசங்களை வழங்கி வழங்கி ஒரு ஒட்டுண்ணி சமூகமாக மாற்றும் பேரினவாததிட்டம்தான் இது.

-தாயகத்தில் இருந்து ராஜேந்திரன்-

முந்தைய செய்திதிருவேற்காடு முத்தூட் நிறுவனம் தாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் கைது.
அடுத்த செய்திஐயப்ப பக்தரின் உடலை காவல் துறை எரியூட்டியது உரிமை பறிப்பாகும்: நாம் தமிழர் கட்சி கண்டனம்