கும்பகோணம் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் வீரவணக்க பொதுக்கூட்டம்

297

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மகாமககுளம் மேல்கரையில் கடந்த 11-12-2011 அன்று ஞாயிற்று கிழமை மாலை 6 மணி முதல் 11 மணி வரை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது நினைவு நாளை ஒட்டி வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை அமைப்பாளர்

சதா முத்து கிருட்டிணன் தலைமை தாங்கினார்.மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் வினோபா முன்னிலை வகித்தார். நகர அமைப்பாளர் மீ.ரகமதுல்லா தீர்மானங்களை வாசித்தார். இக்கூட்டத்தில் மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் மணி செந்தில், வழக்கறிஞர் அறிவுச்செல்வன்,பேராசிரியர் கல்யாணசுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்முழக்கம் சாகுல அமீது, வழக்கறிஞர் நல்லதுரை, அன்புத்தென்னரசன், பேராசிரியர் பால்நியூமன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துக்கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அவர் தன் உரையில் தமிழன் சாதியாய் பிரிந்துக்கிடக்கும் வரை இனம் மேம்படாது என்றும், சாதியை மீறி இனமாக ஒன்றிணைவதுதான் தற்போதைய முக்கிய தேவை என்றும், புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளை என்றும் நினைவில் ஏந்தி நாம் தமிழர் நிற்போம் என முழங்கினார். கூட்டத்தில்
முல்லை பெரியார் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக தேவிக்குளம்,பீர்மேடு,இடுக்கி போன்ற பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் எனவும், மலையாளிகளை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர்களை நிபந்தனையின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும், புரட்சியாளர் அம்பேத்கர் திரைப்படத்தினை தமிழக அரசே முன் வந்து அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும் எனவும்,
கும்பகோணம் நகர வீதிகளுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்ட பெருந்தமிழர்கள் பெயர் சூட்ட வேண்டும் எனவும்,
பள்ளி பாடங்களில் அயோத்தி தாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற வேண்டும் எனவும் உட்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

மாநாடு போன்று நடந்த இக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பல்லாயிரம் மக்களால் விழா சிறப்புற்றது.

முந்தைய செய்திசிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான கேரளாவின் போக்கை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் – படங்கள் மற்றும் துண்டறிக்கை இணைப்பு
அடுத்த செய்திஇன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!!