யுத்தம் முடியவில்லை…- பாலமுரளிவர்மன்

177

யுத்தம் முடியவில்லை

விடுதலைக் கனலை
விடுதலைக் கனலை
வேடிக்கை என்றே நினைத்தாயா?

பெறுதலை விடவும்
தருதலே பெருமை
தமிழா நெஞ்சில் விதைத்தாயா?

யுத்தம் முடியவில்லை!-இன்னும்
யுத்தம் முடியவில்லை!-எங்கள்
ரத்தம் கொதிக்கும் வரையில்
யுத்தம் முடிவதில்லை!

உறக்கம் எமக்கு இல்லை!-சிங்களா
உறக்கம் எமக்கு இல்லை!
ஈழம் பிறக்கும் வரையில்
உறக்கம் எமக்கு இல்லை!

பிறக்கும் எமது பிள்ளை!-புலியாய்
பிறக்கும் எமது பிள்ளை!
அறுக்கும் உந்தன் குடியை !
அங்கே பறக்கும் எங்கள் கொடியே!

நீர் இறைக்கவில்லை-மண்ணில்
பயிர் விதைக்கவில்லை!
ரத்தம் இறைத்து இறைத்து எங்கள்
உயிர் விதைத்திருக்கின்றோம்!

எழுவோம் மீண்டும் நாளை!-நாங்கள்
எழுவோம் மீண்டும் நாளை!
ஈழம் உதிக்கும் வேளை!-அதுவே
ஈழம் உதிக்கும் வேளை!

ஈழம் பிறக்கிறது

ஈழம் பிறக்குது பார்!-தமிழ்
ஈழம் பிறக்குது பார்!
புலிக்கொடி பறக்குது பார்!-அங்கே
புலிக்கொடி பறக்குது பார்!

ஈழம் பிறக்குது பார்!-தமிழ்

ஈழம் பிறக்குது பார்!
புலிக்கொடி பறக்குது பார்!-அங்கே
புலிக்கொடி பறக்குது பார்!

அண்ணன் வருகின்றார்!-பொட்டு
அம்மானும் வருகின்றார்!
அண்ணன் வருகின்றார்!-பொட்டு
அம்மானும் வருகின்றார்!

கரும்புலிவீரர் கடற்படை தலைவர்
யாவரும் வருகின்றார்!-புலிகள்
யாவரும் வருகின்றார்!

கடவுளைக் கண்ட மகிழ்ச்சியில்
கண்கள் நிறைகின்றார்-தமிழர்
கண்கள் நிறைகின்றார்!
சுற்றம் சூழ சொந்தங்கள் வாழ
ஆட்சி புரிகின்றார்!அண்ணன்
ஆட்சி புரிகின்றார்!

பெண்கள் நடக்கின்றார்!நள்ளிரவில்
பெண்கள் நடக்கின்றார்!
அச்சம் சிறிதும் இல்லாமல்
ஆண்கள் துணைக்கு கொள்ளாமல்
பெண்கள் நடக்கின்றார்!நள்ளிரவில்
பெண்கள் நடக்கின்றார்!

பிள்ளைகள் படிக்கின்றார்!-தமிழில்
பிள்ளைகள் படிக்கின்றார்!
தன்னைக் காத்த தலைமகன் கண்டு
தமிழ்த்தாய் சிரிக்கின்றாள்!மகிழ்வாய்
தமிழ்த்தாய் சிரிக்கின்றாள்!

பசுமை நிறைகிறது!-மண்ணில்
பசுமை நிறைகிறது!
பசியும் பிணியும் தேசம்விட்டு
ஓடிமறைகிறது!எங்கோ
ஓடிமறைகிறது!

உலகம் வியக்கிறது!-இந்த
உலகம் வியக்கிறது!
ஒப்பிலாத் தலைவர் செயல்திறன் கண்டு
உலகம் வியக்கிறது!-உடனே
ஐ நா அழைக்கிறது!

அண்ணன் பேசுகிறார்!-நமது
அண்ணன் பேசுகிறார்!
அழகுசிரிப்பும் அன்பும் ததும்ப
அண்ணன் பேசுகிறார்!
ஐ நா சபையில் அண்ணன் பேசுகிறார்!

அண்ணன் நிகழ்த்தும்
மாவீரர்நாள் உரை கேட்ட
மாற்றுநாட்டு தலைவர்களும்
எழுந்து நிற்கின்றார்-சிலிர்ப்பாய்
எழுந்து நிற்கின்றார்!

இந்தியா வருகின்றார்-தலைவர்
இந்தியா வருகின்றார்!
அரசியல்
அறிவியல்
ஆட்சி
நிர்வாகம்
சட்டம்
சமத்துவம்
விவசாயம்
ராணுவம்
அனைத்துத் துறையிலும்
பயிற்சி தருகின்றார்!-தலைவர்
பயிற்சி தருகின்றார்!

உலகம் வியக்கிறது!-இந்த
உலகம் வியக்கிறது!
ஒப்பிலாத் தலைவர் செயல்திறன் கண்டு
உலகம் வியக்கிறது!

ஈழம் பிறக்குது பார்!-தமிழ்
ஈழம் பிறக்குது பார்!
புலிக்கொடி பறக்குது பார்!-ஐ நா சபையில்
புலிக்கொடி பறக்குது பார்!

முந்தைய செய்திபாலை திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் – நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்.
அடுத்த செய்திநாமக்கலில் நடந்த கலந்தாய்வு மற்றும் தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்…