கவிதைகள்

தலைவர் பிறந்த நாள்: வாழ்த்துப்பா!

முன்னைத்தமிழ் மண்ணை மீட்க- அன்னைத் தமிழை- அத்தமிழின் பெண்ணைக் காக்க- தன்னைக் கொடையாய்த் தந்திடும் படையைப் படைத்தான்- பகை உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு கிடைத்தான் இக்கரிகாலன்! ஆண்டாண்டு காலமாய் அடிபட்ட அடிமைப்பட்ட இனத்தின் வலி பொறுக்காது பகை ஒறுக்காது இனம் இருக்காது என்றுணர்ந்து குகைவிட்டு வெளிவந்த புலியாய் வலி கொடுத்தான்- பகையைப் பலி கொடுத்தான்- பாருக்கே கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்! தரைப்படை தண்ணீர்ப்படை தாவும்...

சாத்தானின் சகதோழன்! – யுகபாரதி

நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்… நாங்கள் மீண்டும் ஒருமுறை சொந்தப் பிரதேசத்தில் தோற்கடிக்கப்படலாம். எனினும் நீயோ உன் சகாக்களோ எங்களை ஒருபோதும்...

யுத்தம் முடியவில்லை…- பாலமுரளிவர்மன்

யுத்தம் முடியவில்லை விடுதலைக் கனலை விடுதலைக் கனலை வேடிக்கை என்றே நினைத்தாயா? பெறுதலை விடவும் தருதலே பெருமை தமிழா நெஞ்சில் விதைத்தாயா? யுத்தம் முடியவில்லை!-இன்னும் யுத்தம் முடியவில்லை!-எங்கள் ரத்தம் கொதிக்கும் வரையில் யுத்தம் முடிவதில்லை! உறக்கம் எமக்கு இல்லை!-சிங்களா உறக்கம் எமக்கு இல்லை! ஈழம் பிறக்கும் வரையில் உறக்கம் எமக்கு இல்லை! பிறக்கும் எமது...

பெயரில்லா என் கவிதைகளிலிருந்து…….. – மாரி செல்வராசு

இன்னும் சிறிதுநேரத்தில் என்னை தூக்கிலிட்டுவிடுவார்கள் காலத்தின் கனம் தாங்காமல் கயிறு அறுந்துவிழும் பட்சத்தில் கோப்பை விஷம் வைத்திருக்கிறார்கள் சயனைடு குப்பியை சப்பாமல் தொலைத்துவிட்டவனை சாகடிக்க எதுக்கும் அவசியமில்லை எம் இலட்சியத்தின் மீதான ஆத்திரம் மட்டுமே போதும் அவர்களுக்கு -என் ஆணுறுப்பை நசுக்கியே என்னை கொன்றுவிடக்கூடும் ஆனால் அதுவல்ல பிரச்சனை உயிரற்ற என்...

சீமான் தொடுத்தே விட்டான்! விடுதலைப்போர்

நன்றி தமிழ்க் கொடி

தமிழர் புத்தாண்டு வேண்டுதல் – பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்

அய்யா! என் மகனை கண்டீர்களா? அம்மா! நீங்கள் கண்டீர்களா? பத்தொன்பது வயது சிறுவன் இருபதாண்டுகளாகக் காணவில்லை தேடித் தேடிச் சோர்ந்து போனேன். முதுமையால் இயலவில்லை நீங்கள் உதவி செய்வீரா ? கண்கள் பஞ்சடைத்து போயின. உங்களை எனக்கு தெரியவில்லை நீங்கள் மனிதர்தானே? நான் அனைவரையும்...

தமிழ் தம்பி சீமான் ! – அறிவுமதி

இருந்தான் தம்பி என் தம்பி இருந்தான்! உள்ளே இருந்தான்! ஆம் உனக்குள்ளே எனக்குள்ளே உணர்வுள்ள நமக்குள்ளே இருந்தான்! தொரப்பாடி சிறைக்குள்ளே துளியளவே இருந்தான்! கடல் கடந்த தமிழர்களின் கருத்தான எண்ணத்தில் கடலளவு இருந்தான்! என்றும் இருப்பான்! அடங்கா பெரு நெருப்பின் அணையாத உணர்வழகன்! சிரிப்புக்குள் எகத்தாளம் சிறிதளவே சேர்த்து வைத்து எதிரிகளை மேடையில் ஏராளக் கேள்விகளால் குடைந்தெடுக்கத் தெரிந்திருக்கும் குடிசையிலே பிறந்து வந்த என் குற்றமற்ற தமிழழகன்! ஈழப் பெருந்தலைமை எழுப்பி வைத்தத் தமிழ் விழிப்பை ஊர்தோறும் உசுப்பிவிட உச்சரிப்பால் உழைப்பதற்கு உயர்ந்தெழுந்த உயிரழகன்! கைவிரித்து அவன்பேச கை கட்டி வாய் மூடி கவனிக்கும் கூட்ட மொத்தம் அவனோடு அவனாக அவன் சொல்லும் கருத்தோடு அப்படியே பயணிக்கும்! அதைத்தானே அதிகாரம் அச்சத்தில் கவனிக்கும்! அடிக்கடிதான் அழைத்தழைத்து சிறைக்குள்ளே போட்டடைக்கும்! இடுக்கில் வரும் நீதியினால் இழுத்துவிட முயன்றாலும் இரக்கமற்று இழுத்தடிக்கும்! நடக்குமுறை அத்தனையும் நாதி யற்ற தமிழர் மேல் அடக்கு முறை ஆனாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிழக்கு முறை தேடி கிளர்ந்தெழத்தான் வைத்த அந்தக் கிழத்தான் பெரியாரில் கிளைத் தெழுந்த கலை வளத்தான் என் தம்பி இதற்கெல்லாம் அஞ்சான்! இமியளவும் துஞ்சான்! அலுக்காத உடற்பயிற்சி அழகாக்க அவன் உடலை சேழிப்பான தேக்கெடுத்துச் சேதுக்கி வைத்தப் பலகையியென... அடுக்கடுக்காய் நூலெடுத்து அடிக் கோடும் தான் போட்டு அன்றாடம் படித்ததனால் அணை கட்டித் தேக்கிவைத்த ஆற்றல் மிகு அறிவோடு... சிறிதேனும் ஓய்வின்றி தினம் தினமும் விவாதித்துச் சேர்த்துக் கொண்ட அந்தப் பேரறிவாடு... வெளியே வந்தான் பார் என் வெற்றித் தமிழ்ப் பிள்ளை! ஆணவக் கடுநெஞ்சர் அடுக்கடுக்குத் தடை தாண்டி மீனவத் தமிழ் உறவோர் மீளாத் துயர்...

அண்ணைக்கு அன்னை – அறிவுமதி கவிதை

அழுகின்றேன் அம்மா உன் தூய மகன் கருவறையைத் தொழுகின்றேன் அம்மா என் இனத்தை எழுப்புதற்கே இனிய மகன் பெற்றெடுத்தாய் இன்று எழ முடியா நோய்தன்னை எதற்கம்மா தத்தெடுத்தாய்? ஈரய்ந்து மாதந்தான் உன் பிள்ளை உன் வயிற்றில் இருந்தான் பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க காடென்னும் கருவறைக்குள் கன காலம் கன காலம் கரந்தான் தமிழருக்கே...