நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (05.06.11) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

20

நாமக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று காலை பத்து மணிக்கு (05.06.11)கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார்அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை குழுவிலிருந்து திரு .பாஸ்கரன் அவர்கள் பங்கேற்று கட்சி கட்டமைப்பு, நிர்வாக, ஒன்றியம், கிளை அமைக்கும் முறை குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர்கள் திரு. க .குப்புசாமி செ.வெங்கட் பத்மநாபன் யோககுமார் மற்றும், இளைஞர் பாசறை அமைப்பாளர்கள் திரு. நாவலடி, தே.கார்த்திக், மருத்துவர் உதயசங்கர், ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள். மாவட்டம் முழுவதிலிருந்தும் கட்சி உறுப்பினர்களும் பெண்கள் பாசறை அமைப்பாளர்களும் பெருமளவில்  கலந்துகொண்டனர்.