இலங்கை தின்பண்டங்கள் புறக்கணிப்பை முன்னெடுக்கும் சென்னை இளைஞர்.

92

தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுகொண்டார். இதனையடுத்து தமிழக இளைஞர்கள் பலரும் இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சென்னை உறுப்பினர் சசிகுமார் தான் பணிபுரியும் பன்னாட்டு நிறுவனத்தில் சிற்றுண்டி தின்பண்டங்களில் இலங்கை பொருட்கள் பயன்படுத்துவதை அறிந்து அவைகளை புறக்கணித்தார். மேலும் அந்நிறுவனத்தின் நிர்வாகத்திடம் இலங்கை பொருட்கள் புறக்கணிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து அப்பொருட்களை அந்நிறுவனம் வாங்குவதையும் தனது பணியாளர்களுக்கு அவைகளை வழங்குவதையும் தடுத்துள்ளார். இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழினபடுகொலையை எதிர்க்கும் ஒவ்வொருவரும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும் என தான் வசிக்கும் பணிபுரியும் சூழலில் தமிழ் இளைஞர்கள் வலியுறுத்த வேண்டும் என சசிகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். சசிகுமார் போன்ற தமிழின உணர்வுள்ள இளைஞர்களுக்கு நாம் தமிழரின் வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் விற்பனையாகும் பொருட்களில் பல இலங்கை தயாரிப்புகள் இருக்கின்றன. அவைகளை பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை. அப்பொருட்களை அடையாளம் காட்டும் விதமாக நம் இணையத்தில் பட்டியல் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தமிழர்கள் தங்களுக்கு தெரிந்த இலங்கை தயாரிப்பு பொருட்களின் பெயர்களை naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். சசிகுமார் அடையலாம் காட்டும் பொருளின் படம் கீழே..