8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் கைது.

19

பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991ம் ஆண்டு முதல், இவர் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக புலம்பெயர் பொஸ்னியர்கள் இவரைக் கைதுசெய்யவேண்டும் என அழுத்ததைக் கொடுத்து வந்தனர். மெதுவாக ஐரோப்பிய ஒன்றியமும், பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் இளைக்கப்பட்ட கொடுமைகளை ஏற்றுக்கொண்டது. பல நாடுகளில் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்கா தனது புலனாய்வைப் பயன்படுத்தி இவரைத் தேடிவந்தது. ஆனாலும் இவர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.

ஒரு நகரத்தையே தனது படைகளைக் கொண்டு சூழ்ந்து, அதனை 44 மாதங்களாக சுற்றிவளைத்து, குடி நீர், மின்சாரம், உணவு என்பனவற்றைத் தடைசெய்து, அன் நகரம் மீது ஷெல் தாக்குதலையும் மேற்கொண்டார் ரட்கோ மிலாடிஜ். செபனீட்சியா என்னும் இடத்தில் சுமார் 8,000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதனை உதாரணம் காட்டியே இலங்கைப் பிரச்சனையும் சனல் 4 தொலைக்காட்சியில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் இன்று சேபியாவில் அருகே உள்ள கிராமம் ஒன்றில், இவரை சேபியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இலங்கை கலக்கத்தில் உள்ளது. காரணம் என்னவெண்றால், ரட்கோ மிலாடிஜை சர்வதேசம் தூற்றி வந்தாலும், அவர் கைதுசெய்யப்படமாட்டார் என இலங்கை உட்பட பல நாடுகள் எண்ணி வந்தது. ஆனால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ரட்கோ மிலாடிஜ் மீது மரபணுப்பரிசோதனை நடத்தப்படுவதாவும், உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் நேரடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.