ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அரசு மேற்கொண்ட போர்குற்ற விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா – இந்தியன் எக்ஸ்பிரஸ்

11

நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு மேற்கொண்ட  விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் நேற்றைய (26) பதிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வருகின்ற மே மாதம் 30 ஆம் நாள் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்குற்ற விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என்றும் அமெரிக்கா மற்றும்  பிரித்தானியாவினால் கொண்டுவரப்படும் எந்த தீர்மானத்தையும் அதில் அங்கம் வகிக்கும் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் எதிர்க்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தற்போது இந்தியா அங்கம் வகிக்கவில்லை ஆனால் இந்தியாவின் நடவடிக்கைகளை ஆசிய- ஆப்பிரிக்க நாடுகளும் மற்றும்  சில மேற்குலக  நாடுகளும் பின்பற்றலாம் என்பதால், இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு சிறீலங்கா முயன்றிருந்தது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் கைது.
அடுத்த செய்திதினமணி தலையங்கம்: கட்டுப்படுமா விலைவாசி?