[படிவம் இணைப்பு] பான்கிமூனுக்கு 2 கோடி கையெழுத்துகளை விரைந்து அனுப்பவும்: பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்

453

சிறீ லங்காவின் அரசியல் தலைவர்களையும், இராணுவத்தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் வழக்குத்தொடுநருக்கு முன் பாரப்படுத்துமாறும், நிபுணர்குழுவின் பரிந்துரையின்படி விசாரணைக்கான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் 15-05-2011க்குள் குறைந்ததது இரண்டு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு விரைந்து பணியாற்ற வேண்டுமென உரிமையுடன் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி  வலியுறுத்தியுள்ளார்.

அன்புள்ள தோழர்களுக்கு,வணக்கம்.

மேதகு பான் கீ மூன், செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. அலுவலகம், நியூயார்க் அவர்களுக்கு,அனுப்பி வைப்பதற்கான கையெழுத்துப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது, அதில் ஏழு பக்கங்கள் உள்ளன. (கிடைக்காதவர்கள் கீழுள்ள படவடிவக்கோப்பினை A4 அளவிலான தாளில் அச்செடுத்துக் கொள்ளலாம்)

அதில் 5 தாள்களில் தாளுக்கு 20 பேர் என 100 பேர் கையெழுத்து போடுவதற்கான இடம் உள்ளது, அதில் பெயர், நாடு, மின்அஞ்சல் அல்லது தொலைபேசி,  என்ற தகவல்களை முழுமையாகப் பூர்த்தி செய்து கையொப்பம் பெற்று அனுப்பி வையுங்கள்..

ஸ்கேன் செய்யும் வசதி உடையவர்கள் இந்தக் கையொப்பம் பெற்ற தாளினை ஸ்கேன் செய்து rar கோப்பாகச் சுருக்கி அனுப்பலாம். ஸ்கேன் செய்த பக்கங்களை அனுப்பவேண்டிய மின்அஞ்சல் முகவரிகள் – pollachinasan@gmail.com  & kolathurmani@gmail.com & periyarmuzhakkam@gmail.com

ஒவ்வொரு 100 கையொப்பம் ( ஏழு தாள்கள் ) முழுமையானதும் அந்த ஏழு பக்கங்களையும் உடனே அனுப்பி வையுங்கள்.ஏனெனில் மே 18 இல் ஐ.நா. அவையில் இதனைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே அவசரம் கருதி கையொப்பம் பெற்று உடன் அனுப்பி வையுங்கள்..16 ஆம் தேதிக்குள்  கிடைக்குமாறு, கீழ்க்கண்ட முகவரிக்கு ப்ரபஷனல் கூரியரில் அனுப்பி வையுங்கள்.

கூரியர் அனுப்ப வேண்டிய முகவரி –

வெ. வெள்ளியங்கிரி,  நகர செயலாளர்,  பெரியார் தி.க,

யாழ் தையலகம்,   107/1  ஆரோக்கியநாதர் வீதி,       பொள்ளாச்சி 1       அ.கு.எண் 642001    கைபேசி:    98424 87766

( இது தொடர்பாக மேலும் தகவல் பெற விரும்புபவர்கள்  97885 52061 என்ற தொலைபேசியில் விளக்கம் பெறலாம். )

15-05-2011க்குள் குறைந்ததது இரண்டு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என்பது இலக்கு. அதை மனதில் கொண்டு விரைந்து பணியாற்ற வேண்டுமென உரிமையுடன் வலியுறுத்துகிறேன்.

தோழமையுடன்,

கொளத்தூர் மணி,

தலைவர், பெரியார் திராவிடர் கழகம்.

கையெழுத்து படிவம் – பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

(Right click and click ‘Save link as’)