ரஷ்யா சீனா இந்தியா ஆகிய 3 நாடுகளும் போர் குற்றத்துக்கு உடந்தை !

31

இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் போர் குற்றங்களுக்கு ரஷ்யா சீனா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்  என தெரிவிக்கப்படுகிறது.


மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போரில் இறப்பதற்கு இந் நாடுகள் ஒருவகையில் உதவியுள்ளதாக கருதப்படுகிறது. இது குறித்த காணொளியை சனல் 4 தொலைக்காட்சி இன்று தனது செய்திநேரத்தில் வெளியிட்டது. பல லட்சக்கணக்கான பிரித்தானிய மக்கள் இதனைப் பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள இந் நேரத்தில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிடும் ஆதாரங்களும், இது குறித்த விடையங்களும் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதாக அறிவார்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் போர் நடைபெற்றபோது  அதனை நிறுத்த ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் கூடியவேளை அதனை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது இந்த நாடுகளே என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அத்தோடு இந் நாடுகளுக்கு எதிராக சவதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்கு தொடரமுடியுமா எனவும் ஆரயப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையை ஆதாரமாக வைத்தே இவ்வழக்கைத் தொடர சட்டத்தில் இடம் உள்ளதா எனவும் ஆராயப்படுவதாக அதிர்வு இணையம் அறிகிறது.

நன்றி ; அதிர்வு

முந்தைய செய்திஇலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதம் வழங்கிய நாடுகள் குறித்ததும் விசாராணை மேற்கொள்ள வேண்டும் – கோர்டன் வைஸ்.
அடுத்த செய்திஉயிருடன் சரணடைந்த தளபதி ரமேஷ் படுகொலை: புதிய போர்குற்ற ஆதாரம்