[படங்கள், காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்ககோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

32

பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4  பேர் தங்களை விடுவிக்க கோரி 19-4-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.  இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தப்பி தமிழ்நாட்டிற்கு தொப்புள்கொடி உறவுகளின் உதவி நாடி வந்தவர்கள். அப்படி வந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கவைப்பதாக கூறி உண்மையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை பிணையில் விடுவிக்க கூறி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை இவர்கள் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

இதனையடுத்து கடந்த 1-2-2011 அன்று முதல் 8-2-2011 வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது 5 பேரை மட்டும் விடுவித்துவிட்டு அமலன், ஜெயமோகன் ஆகியோரை பத்து நாட்கள்  கழித்தும் சந்திரகுமரன், கங்காதரன் ஆகியோரை ஒரு மாதம் கழித்து விடுவிப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து உனாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் வாக்குறுதியளித்த படி இவர்களை விடுவிக்காததால் அமலன்,ஜெயமோகன்,சந்திரகுமாரன்,கங்காதரன் ஆகியோர் தங்களை விடுவிக்ககோரியும் மேலும், தங்கள் மீதான குற்றங்களுக்கு முறையாக குற்றப்பத்திறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஏதிலிகள் முகாமில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் திறந்தவெளி முகாமில் தங்கள் குடும்பத்தாருடன் தங்க வைக்க வேண்டியும்  நேற்று 19-2-2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.