சிரியாவில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு எதிராக ராணுவத்தினர் துப்பாக்கிசூடு – 25 பேர் பலி

62

சிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை தொடர்ந்து ராணுவம் தனது தாக்குதலை கடுமையாக்கி உள்ளது.   நேற்று தலைநகர் டமாஸ்கஸ் புறநகரில் உள்ள தவுமா, அல்-மாதாமியா மற்றும் டாரா உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நோக்கி டாங்கிகள் மூலம் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக சுட்டனர். அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருந்தும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஐ.நா. சபையின் மனித உரிமை கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜோர்டான் எல்லையில் போராடும் மக்கள் மீது ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்துகின்றன.

முந்தைய செய்திஇலங்கை பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது – த இந்தியன் எக்ஸ்பிரஸ்
அடுத்த செய்திசுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணமே அதிகம் உள்ளது – விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே