உலக தாய்மொழி நாளான 21.02.11 அன்று திருப்பூர் மாவட்டம் “பல்லடம்” நகரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. இம் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழ் இனத்தின் வீரத்தாய்,தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாவின் திரு உருவ படமும்,தமிழின எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுக்கோட்டை முத்துக்குமார் அவர்களின் படமும் செந்தமிழன் சீமான் அவர்களால் திறக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள்”நாம் தமிழர் கட்சி ஏன்?எதற்க்கு?” என்கிற தலைப்பிலும்,தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்தும் எழுச்சியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் டப்ளின் தீர்ப்பாய உறுப்பினர் பால் நியூமென் கலந்துகொண்டு இலங்கை இன வெறி அரசின் போர்குற்றங்களை சர்வதேச சமூகத்திற்க்கு கொண்டு செல்வது குறித்து பல்வேறு விளக்கங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்திற்க்கு பல்லடம் பகுதி ஒருங்கிணைபாளர்கள் வான்மதி வேலுச்சாமி,ராசேசுக்கண்ணா,மணிகண்டன் ஆகியோர் சிறப்பான ஏற்ப்பாடுகளை செய்திருந்தனர்.பல்லடம் பகுதி நாம் தமிழர் கட்சியின் மயில்சாமி,சுந்தரம்,ஜெயா,பொன்னுச்சாமி,செகன்,குமார்,ராசு,விசையன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளில் பங்கேற்று உழைத்தனர்.
இக்கூட்டத்தில் திருப்பூர் நகர அமைப்பாளர் சு.ப.சிவக்குமார்,வழக்கறிஞர் ராசீவ்காந்தி,பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்திற்க்கு திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் மோகன்,செல்வம்,சண்முகசுந்தரம்,வெள்ளகோயில்சியாமளா,சமரன்பாலா,கவுரி சங்கர்,பரமசிவம்,பிரகாசு ஆகியோர் நிகழ்சி ஏற்பாடுகளை கவனித்தும்,நிகழ்சியில் பங்கெடுத்துக்கொண்டனர்.பாதுகாப்பு பணியில் தமிழன்வடிவேல்,ராஜ்குமார்,சரண் ஆகியோர் ஈடு பாட்டுடன் பணியாற்றினர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நெல்லை சிவா,மதுரை வெற்றிக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்தின் ஆரம்பமாக தாய்தமிழ் பள்ளி குழந்தைகளின் தமிழிசைக்கான நடன நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது