காங்கிரஸ் தி.மு.க கூட்டணி முறிந்தது – விலகியது தி.மு.க

184

காங்கிரசுடன் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மத்திய காங்கிரசு கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க இன்று நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.

இருபெரும் துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளுமான தி.மு.க வும் காங்கிரசும் தங்களுக்குள் மாறி மாறி குழிபறிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஈழத்தில் தமிழினமே சிங்கள இனவெறி அரசின் வெறியாட்டத்தால் அழியும் போதும் போரின் உச்சக்கட்ட நேரத்தில் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் தாயக தமிழகத்தை நோக்கி உதவி கரம் நீட்டியபடியே கொத்து கொத்தாய் செத்து விழுந்தபோதும்கூட வெறும் கூட்டணி விலகல் நாடகங்களை நடத்தியது தி.மு.க. பதவிக்காகவும் கூட்டுக் கொள்ளைக்காகவும் தமிழர்களின் ரத்தத்தின் மேல் நாற்காலி பேரம் நடத்தியது தி.மு.க. காங்கிரஸ் தலைவி சோனியாவிற்காக தமிழினத்தையே காவுகொடுதார் கருணாநிதி.

ஒரு முதலமைச்சரால் என்ன செய்ய முடியும் என்றும் கூட்டணியில் இருந்து விலகுவது எதற்கும் பயன்படாது, போர்நிறுத்தத்திற்கு சிறிதும் பயன்படாது என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு மறுபுறம் மக்களை ஏமாற்ற மனிதசங்கிலி, உண்ணாவிரதம் போன்ற நாடகங்களை அரங்கேற்றியது, தமிழக உறவுகள் தங்கள் தொப்புள்கொடி உறவுக்காய் தன்னெழுச்சி பெற்று போராட்டத்தில் இறங்கியவர்களை சிறையில் அடைத்து, மாணவர்களுக்குள் பிளவு ஏற்ப்படுத்தி, வழக்கறிஞர்களை தாக்கி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து காங்கிரசின் தமிழர் விரோதப்போக்கிற்கு தூணாக துணை நின்றார் கருணாநிதி. இப்போதும் கூட தமிழகத்தின் கடலெல்லாம் மீனவர்களின் ரத்தமான போதும் டெல்லிக்கு கடித கும்பிடுகள் போட்டுக்கொண்டிருந்தார் கருணாநிதி.

ஆனால் கருணாவின் இன்றைய நிலைப்பாட்டை பாருங்கள் தமிழர்களே !

தமிழ்நாட்டை திருடுபவனை இந்தியாவை திருடுபவனின் அரசியல் ஆட்டங்கள் அதிரவைத்துள்ளது.

தொகுதி பங்கீட்டு எண்ணிக்கைக்காக இன்று இந்திய அரசின் ஆட்சியையே ஆட்டிப்பார்க்க துணிந்த கருணாநிதி தான் அன்று பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலத்திற்கு கூட செவி சாய்க்காமல் கந்தக குண்டுகளால் கருகும் போது கூட தன் குடும்பத்தின் வருமானத்திற்காக சொக்க தங்கம் சோனியா என்றும் தியாக திருவிளக்கு என்று பிதற்றிக்கொண்டிருந்தார். மே 18 அன்று உலகத்தமிழினமே தனது சுத்ததிர போராட்டம் உலக வல்லாதிக்க நாடுகளாலும் இந்திய தமிழக அரசின் நயவஞ்சக நாசசெயலாலும் ஒடுக்கப்பட்டு ஒவ்வொரு தமிழனின் வீடும் இழவு வீடாய் காட்சியளித்த போது அதே நேரத்தில் மே 22 அன்று அரசியல் தரகர் நீரா ராடியா வழியாக கருணாநிதி குடும்பத்தினர் மிச்சம் இருக்கும் தமிழகத்தை கூறு போட்டு பிரித்துக்கொள்ள பதவிபேரம் நடத்திய தொலைபேசி உரையாடல் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

கருனாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று பல்லாயிரம் கோடி தொழிலதிபர்கள். ஊழலின் உச்சத்தை எட்டிபிடித்தவர்கள். காங்கிரசுன் கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள். நிலை இவ்வாறு இருக்க கூட்டணியில் இருந்து விலகுவது என்பது தன் முதலாளித்துவ குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரிந்தும், வெளிவந்துள்ள இந்த தீர்மாணம் வெறும் நாடகமாக காங்கிரசை பணியவைக்கும் முயற்சியாக மட்டுமே பார்க்கவேண்டியுள்ளது.

நாளையே காட்சிகள் மாறி பிரணாப்முகர்ஜியுடன் கருணாநிதி பல்லிளித்துக்கொண்டு உடண்படிக்கை கையெழுத்திடலாம். தன் குடும்பத்துடன் குலாம்நபி ஆசாத்திற்கு குதூகலமாக விருந்து வைக்கலாம்.

ஆனால் தி.மு.கவையும் கருணாநிதியின் சுயநல நாடகங்களையும் உலக தமிழினம் உணர்ந்துகொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தான் இந்த கூட்டணி முறிவு நிகழ்வு.

முந்தைய செய்திகரூரில் செந்தமிழன் சீமான் உரை
அடுத்த செய்தி[காணொளி இணைப்பு] நேற்று 06.03.11 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சீமான் அளித்த நேர்காணல்