தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை

156

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

எமது அன்னையும்,மேதகு தமிழ் தேசியத்தலைவர் அவர்களின்  தாயாருமான பார்வதி அம்மாள் தமிழீழத்தின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று இறந்து விட்டார் என்னும் துயரச்செய்தி வந்துள்ளது.வரலாற்றில் இன விடுதலைப் போராளியாக, அடிமைப் பட்டுப்போன ஓர் இனத்தின் விடிவெள்ளியாக, விடுதலையின் குறியீடான எங்கள் தேசியத் தலைவரை இந்த மன்ணுக்குத் தந்த என் தாயார் இன்று நம்மிடையே இல்லை.தமிழ் தேசத்தின் தியாகச் சுடராக அவர் இன்று உலகெமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார்.மானிடத்தின் விடுதலையை நேசிககும் அனைவரின்  மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அவர் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும். நாங்க‌ள் வ‌ர‌லாற்றில் ப‌டித்த‌ க‌ரிகால‌னை நேரில் காட்டிய‌வர் அன்னை.அன்னைக்கு நாம் அனைவரும் நேரில் சென்று வணங்கி அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு ஈழம் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.விரைவில் இந்த இழி நிலை மாறும்.அன்னைக்கு நாம் தமிழர் கட்சி தனது புரட்சிகர வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தனது இறுதிக்காலத்தில் தனது உடல் நலனுக்குச் சிகிச்சை பெறும் பொருட்டு தாய்த் தமிழ்நாடு வந்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதநேயமற்றுத் திருப்பி அனுப்பினார்கள்.எந்த ஆட்சி அதிகாரம் அவருக்கு அனுமதி மறுத்ததோ அந்த ஆட்சி அதிகாரமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் இன்று நம் நாட்டின் சாலைகளெங்கும்,தெருக்கள் எங்கும்,சந்து பொந்துகள் எங்கும் அன்னையின் தியாகத் திருவுருவத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற வேண்டும்.அன்னையின் நினைவைப் போற்றும் வகையில் ஐயா நெடுமாறன் அவர்கள் நட்த்தும் அமைதிப் பேரணியில் நாம் தமிழர் சார்பில் அதில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.இன்று மாலை கோவையில் அன்னையின் நினைவைப் போற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.

முந்தைய செய்திதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார்.
அடுத்த செய்திதேசியத் தலைவரின் தாயாரின் மறைவை தொடர்ந்து சேலம் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் கூட்டம்.