தமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை

33

06.06.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் “சீமானுக்கு எதிராக திரளும் கருப்புச் சட்டைகள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில், என்னிடம் பேட்டி எடுத்து, நான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். அந்த செய்திக் கட்டுரையை வெளியிட்ட கணேஷ் குமார் என்பவர் என்னிடம் எந்த ஒரு பேட்டியையும் எடுக்காமல், நான் கூறியதாக வெளியிட்டுள்ள தகவல்கள் பொறுப்பற்றவை, இதழியல் நெறிமுறைகளுக்கு புறம்பானவை.

நாம் தமிழர் கட்சி வெளியிட்ட ஆவணம் குறித்து தமிழக அரசியல் இதழில் இருந்து ஒருவரும் என்னோடு பேசவில்லை. அப்படியிருக்க, நான் சொல்லாததை சொன்னதாக அடைப்புக் குறிகள் போட்டு கூறியிருப்பது விசமத்தனமான செயலாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மைக்குப் புறம்பான இப்படியொரு செய்தியை வெளியிட்டுருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தந்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பை நாம் தமிழர் கட்சி பெருமையாக பரப்புரை செய்துவருகிறது. உண்மை இவ்வாறிக்க, தமிழின உரிமை இழப்பிற்கு பெரியாரே முதற்காரணம் என்று நான் கூறியதாக தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருப்பது மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியின் பெருமையை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயலாகும்.

எனது இந்த மறுப்பை தமிழக அரசியல் இதழில் வெளியிடுமாறு இதழாசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்தி10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளின் விடுதலை கோரி அரசின் கவன ஈர்ப்பு தொடர் பொதுக்கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்தி13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை