நெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011

54

மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வித்யாசாகர் அவர்கள் படித்தார்கள். தொடர்ந்து தோழர்.கலையழகன் “முத்துக்குமாரே முத்துக்குமாரே வீரவணக்கம்” என்ற தேனிசை செல்லப்பாவின் பாடலை பாடினார்.தொடர்ந்து, அனைவரும் கைகளில் சுடரேந்தி தமிழர் இன எழுச்சி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்வினிடையே தோழர்கள் பகலவனும் வித்யாசாகரும் உணர்வுமிகுந்த கவிதைகளை படிக்க, தோழர்கள் அன்பரசன், சிவ்சங்கரன், அறிவழகன், கலையழகன், மகிழன், பட்டுக்கோட்டை சத்யா ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினர்.

வழ.நல்லதுரை தயாரித்து பிரகதீசுவரன் இயக்கிய மாவீரன் முத்துக்குமார் ஆவணப்படமான ”சனவரி-29” என்ற இறுவட்டினை தோழர்.ஆரணி இரமேசு அவர்கள் வெளியிட தோழர் தேனி இரமேசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.தோழர்.பொள்ளாச்சி இராசேந்திரன் அவர்கள், மதிமுக பொ.செயலாளர் திரு.வைகோ அவர்கள் தயாரித்து இயக்கி வெளியிட்ட ”ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என்ற ஆவணப்பதிவினை வெளியிட்டு உரையாற்றினார்கள். அதனை ஓவியர் கொண்டல்ராசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில், ”என்ன செய்யலாம் இதற்காக?”என்ற நூலினை தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.

நிகழ்வினை தோழர் விருதை பாரி அவர்கள் எழுச்சியோடும் கருத்துக்களோடும் தொகுத்து வழங்கினார்கள்.இந்நிகழ்வில், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திமுத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29-01-2011
அடுத்த செய்திமுத்துக்குமார் நினைவேந்தல் தூத்துக்குடி 29-1-2011