வெல்லப்போறான் விவசாயி! – நாம் தமிழர் தேர்தல் பரப்புரைக்காக டென்மார்க் வாழ் தமிழர் தயாரித்த பாடல் காணொளி

580

பேரன்பு மிக்க என் தமிழ் மக்களே…

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் தமிழருக்கான தனித்துவம் மிக்க ஒரு அரசியல் கட்சியாக, தமிழர் நலங்களில், தமிழர் நிலங்களில், தமிழர் உரிமைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகின்றது நாம் அறிந்ததே.
2009ம் ஆண்டின் பின்,  இறந்த எம் மாவீரர் புகழை, அவர்கள் கொள்கையை, தமிழர் வீரத்தை தமிழ் நாட்டு மக்களுக்கு மேடை மேடையாக தனித்து நின்று பறைசாற்றியமைக்கும், ஈழத்தமிழர் வரலாற்றை தமிழ்  நாட்டின் அடுத்த தலைமுறையினருக்கு  சரியான முறையில் கடத்திய பெருமை கடந்த பத்து ஆண்டுகளில் அண்ணன்  சீமானையே சேரும்.
நான் வாழும் டென்மார்க் நாட்டினை தமிழக மக்களுக்கு உதாரணம் காட்டி, டென்மார்க் நாட்டை போன்று  அனைத்து உயிர் இனத்திற்குமான ஓர் நல்ல அரசியலை, மக்களுக்கான சிறந்த பொருளாதாரத வளர்ச்சியை தனது மேடைப் பிரச்சாரத்தின் மூலம் பறைசாற்றிவரும் அண்ணன் சீமானுக்கு டென்மார்க் மக்கள் சார்பாக எனது  நன்றியினை தெரிவிப்பதோடு, இந்த தேர்தலில் வெற்றி பெற என் நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் வலிமைமிக்க வாக்குகளை விவசாயி சின்னத்தின் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு செலுத்தி வரலாற்றை மாற்றியமைக்க தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் வேண்டி நிற்கின்றேன்.
இதை பார்த்துவிட்டு கடந்து செல்லாது, கூடியவரை பகிர்ந்து, தமிழ் நாட்டு மக்கள் எல்லோருக்கும் இந்த பாடல் சேர்ந்தடைய உதவுவீர் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். வென்ற பின் வாழ்த்துவதை விட, வெல்வதற்கு கை கொடுப்போம்.
எத்தனையோ மேடைகளில் தன் பேச்சாற்றலால் தன் இரத்தத்தை வியர்வையாக்கி, மக்களோடு மக்களாக அண்ணன் சீமானும் அவர் கட்சியினரும் போராடி வரும் இந்த வேளையில் புலத்திலிருந்து என் இனத்தின் விடுதலைக்காக, எனது நிறுவனத்தின் மூலம் இந்த தேர்தல் பாடலை நாம் தமிழர் கட்சியினருக்கு பரிசாக சமர்ப்பிக்கின்றேன்.  இத்தேர்தலில் போட்டியிடும் மற்ற கட்சியினருக்கும் எனது நல் வாழ்த்துகள். நாம் தமிழர்!!!
உணர்வுடன்
ஜெறி ஜெராட்
டென்மார்க்

Drums Jerry Entertainment Denmark  24/02/2021

 

முந்தைய செய்திவிராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை
அடுத்த செய்திபோக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்